கீழ்பவானி வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டி உடல்

கீழ்பவானி வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டி உடல்
X

பைல் படம்.

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டியின் உடல் வெள்ளோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறையை அடுத்துள்ள புங்கம்பாடி ஊராட்சி மேட்டுப்பாளையம் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஒரு பெண் பிணம் மிதந்து வந்தது. தகவலறிந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டியின் உடலை மீட்டனர். பின்னர் இதுதொடர்பாக வெள்ளோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விசாரணையில், அவர் நம்பியூர் அருகே குருமந்தூர், மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த மாரப்பகவுண்டர் மனைவி சரஸ்வதி என தெரியவந்தது. இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!