ஈரோட்டில் நள்ளிரவில் பாஜக பிரமுகரின் கார் தீ வைத்து எரிப்பு

ஈரோட்டில் நள்ளிரவில் பாஜக பிரமுகரின் கார் தீ வைத்து எரிப்பு
X

சத்தியமங்கலம் அருகே மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட கார்.

Car Fire Accident -சத்தியமங்கலம் அருகே நள்ளிரவில் பாஜக பிரமுகர் கார் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Car Fire Accident -நேற்று முன்தினம் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ. ஏ அதிகாரிகளை சோதனை நடத்தி நிர்வாகிகளை கைது செய்தனர். இதனை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது மட்டுமின்றி பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி முன்னாள் நகர பொருளாளராக பதவி வகித்து வந்தவர் சிவசேகர். இவர் தற்போது புஞ்சை புளியம்பட்டி பிரச்சார அணி பிரிவு தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு வெளியே சென்று விட்டு தனது காரை வீட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.

திடீரென இரவு சுமார் ஒரு மணி அளவில் அவரது வீட்டின் வெளியே ஏதோ சத்தம் கேட்பதை கண்டு அவர் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவசேகர் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காரின் மீது தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது.இது குறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் பாஜக மூத்த நிர்வாகி சிவசேகர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காரை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தற்போது பல்வேறு இடங்களில் பாஜக நிர்வாகிகளை குறி வைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி வரும் நிலையில் புஞ்சைபுளியம்பட்டியில் பாஜக மூத்த நிர்வாகியின் காரை மர்ம நபர்கள் தீ வைத்து சென்றது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து தற்போது பாதுகாப்பிற்காக புஞ்சைபுளியம்பட்டி நகரம் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று நள்ளிரவு 1 மணியளவில் பாஜக பிரமுகர் சிவசேகர் என்பவருக்கு சொந்தமான கார் மர்ம நபர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்