தாளவாடி அருகே கரும்புபயிர்களை சேதம் செய்த காட்டுப்பன்றிகள்

தாளவாடி அருகே கரும்புபயிர்களை சேதம் செய்த காட்டுப்பன்றிகள்
X

சேதமடைந்த கரும்பு பயிர்.

தாளவாடி அருகே நெய்தாளபுரம் கிராமத்தில் கரும்பு பயிர்களை சேதமாக்கிய காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் கவலை.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த நெய்தாளபுரம் கிராமமானது தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்டது. இந்த பகுதியில் அதிகமாக கரும்பு பயிரிடப்படுகிறது ‌‌ இந்நிலையில் மகேந்திரன் என்பவர் தனது தோட்டத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் கரும்பு விவசாயம் செய்து வருகிறார். நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றிகள் சுமார் 1 ஏக்கருக்கு மேற்பட்ட கரும்பு பயிர்களை சேதம் செய்தது.தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதம் செய்து வருவதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future