ஈரோடு அருகே ஏட்டு மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை

ஈரோடு அருகே ஏட்டு மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை
X
சத்தியமங்கலத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு ஏட்டு மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கரட்டூர் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சந்திரமோகன், தலைமை காவலர் .இவரது மனைவி தாமரைச்செல்வி (41). இவர்களுக்கு பிரவீன்-13 பிரனேஷ்-11 என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தாமரைச்செல்வி கடந்த இரண்டு வருட காலமாக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மிகவும் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென தாமரைச்செல்வி தனது கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது அலறல் சத்தம் கேட்டு முன் அறையில் படுத்திருந்த தலைமை காவலர் சந்திரமோகன் மற்றும் மகன்கள் ஆகியோர் அவரை மீட்டு சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தாமரைச்செல்வி உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தாமரைச்செல்வி எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடித்தில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், அனைவரும் நலமுடன் இருக்க வேண்டி பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்