மீன்வள உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரவேற்பு: கலெக்டர் தகவல்

மீன்வள உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரவேற்பு: கலெக்டர் தகவல்
X
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் காலியாக உள்ள 7 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

பவானிசாகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள 7 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழில் எழுதப்படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். நீந்துதல், மீன் பிடித்தல், வலைப் பின்னுதல், பரிசல் ஓட்டுதல் மற்றும் அறுந்த வலைகளை சரிசெய்ய தெரிந்திருக்க வேண்டும். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்.பவானிசாகர் புங்கார் காலனி டேம் ரோட்டில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் வருகிற நவம்பர் மாதம் 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மேலும் தகவலுக்கு 04295 299242 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி