திம்பம் மலைப் பாதையில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்க தடை

திம்பம் மலைப் பாதையில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்க தடை
X

திம்பம் மலைப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவு.

திம்பம் மலைப்பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 8,10,12 சக்கர வாகனங்கள் இயக்க தடை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம் - கர்நாடகவை இணைக்கும் திம்பம் மலைப் பாதையில் 24 மணி நோமும் சரக்கு வாகனங்கள் பயணிக்கின்றன.தற்போது கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படுவதால் தான் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றன. சாலை இடர்பாடுகள் போக்குவரத்து பாதிப்புகள் ஆகியவற்றை தடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேற்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி நேற்று இரவு முதல் திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்தில் அதாவது மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 8,10, 12 சக்கர வாகனங்களை இயக்கத் தடை செய்யப்படுகின்றன.


இதையடுத்து மாலை 6 மணிக்குமேல் வரும் சரக்கு வாகனங்கள் கர்நாடகவிலிருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்கள் ஆசனூரிலும், தமிழகத்திலிருந்து கர்நாடக நோக்கி செல்லும் வாகனங்கள் பண்ணாரி சோதனைச் சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டு காலையில் புறப்பட அனுமதிக்கப்படும்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil