குன்றி மலைப்பகுதி மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி

குன்றி மலைப்பகுதி மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி
X

பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.

குன்றி மலைப்பகுதியில் உள்ள சிறப்பு பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில், நவம்பர் முதல், பள்ளிகள் திறக்கப்படுவது போல, குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களும் தொடங்கி நடைபெற உள்ளன. மாணவ- மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் தினமும் பாடவகுப்புகள் நடத்தப்படுகிறது. அதன்படி சிறப்பு பயிற்சி மையங்களில் மாணவ- மாணவிகளுக்கு கல்வி குறித்த புத்துணர்வு பயிற்சி பயிற்றுனர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது.

சத்தியமங்கலம் வட்டாரம் குன்றி மலைப்பகுதியில் உள்ள குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையத்தில், புத்துணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஈரோடு தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் சி.சுப்பிரமணியன், குன்றி பகுதி மையங்களின் தொழில் கல்வி பயிற்றுனர்கள் சி.சதீஷ், பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி அளித்தனர். இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil