தொடர் விடுமுறை காரணமாக பவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக பவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
X

பவானிசாகர் அணையில் குவிந்த பொதுமக்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையால் பவானிசாகர் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

பவானிசாகர் அணை மற்றும் அதனையொட்டிய பூங்காவில் காலை முதலே ஏராளமான பேர் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் அணையின் அழகை கண்டு ரசித்து செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் பூங்காவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சுடச்சுட மீன்களை வாங்கி சாப்பிட்டனர். இதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு பவானிசாகர் அணையில் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால் பவானிசாகர் அணை பகுதியில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இதனையடுத்து இன்று காலையும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் பவானிசாகர் அணை பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்