தாளவாடி அருகே தோட்டத்தில் மீண்டும் புலி நடமாட்டம்

தாளவாடி அருகே தோட்டத்தில் மீண்டும் புலி நடமாட்டம்
X

தாளவாடியில் விவசாய தோட்டத்தில் பதிவான புலியின் கால் தடம்.

தாளவாடி அருகே தோட்டத்தில் மீண்டும் புலி நடமாட்டம் தொடங்கியுள்ளது.

தாளவாடி அருகே உள்ள பாரதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 37). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து விவசாயம் செய்து வருகிறார்.

வேலு இன்று காலை தனது தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது தோட்டத்தில் மர்ம விலங்கு கால்தடம் பதிவாகி இருந்தது.உடனே இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று கால்தடத்தை ஆய்வு செய்தனர். இதில் தோட்டத்தில் பதிவானது புலியின் கால்தடம் என்பது உறுதியானது. இதன் மூலம் அங்கு புலி நடமாட்டம் உள்ளது தெரியவந்தது.கடந்த 3 நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் பழனிச்சாமி என்பவர் தோட்டத்தில் புலியின் கால்தடம் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அதே பகுதியில் புலி நடமாடி வருகிறது. மனிதர்கள், கால்நடைகளை தாக்கும் முன்பு புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!