பவானிசாகர் அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

பவானிசாகர் அணை (பைல் படம்).

அணையின் நீர்மட்டம் விரைவில் 102 அடியை எட்டும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 04.10.2021 காலை 9.00 மணிக்கு 101.81 அடியை எட்டியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்குள் அணையின் நீர்மட்டம் 102.00 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 102.00 அடியை எட்டியவுடன் அணைக்கு வரும் நீர்வரத்தினை பொறுத்து அதிகப்படியான நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படும் என தமிழநாடு நீர்வளத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான் இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!