ஆக்சிஜன் அளவு குறைந்து கல்லூரி மாணவி பலி: சத்தியமங்கலத்தில் சோகம்

ஆக்சிஜன் அளவு குறைந்து கல்லூரி மாணவி பலி: சத்தியமங்கலத்தில் சோகம்
X

கோப்பு படம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் கல்லூரி மாணவி திடீரென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொண்டப்ப நாயக்கன்பாளையம் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு தமிழரசி, தாரணி (18) ஆகிய 2 மகள்களும், அய்யப்பன் என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களும் சத்தியமங்கலம் அரசு கலை கல்லூரியில் படித்து வருகின்றனர்.

மாணவி தாரணி, பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தாரணி கடந்த 5 நாட்களாக சோர்வாக காணப்பட்டார். இதுபற்றி அவரது தந்தை கேட்டபோது, தனக்கு ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டு, எதுவும் சாப்பிடாமல் தாரணி தூங்க சென்று விட்டார். மறுநாள் காலையில், தனக்கு காய்ச்சல் இருப்பதாக தாரணி தெரிவித்தார்.

இதையடுத்து, பெற்றோர் தாரணியை சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றனர்.தாரணியை பரிசோதனை செய்த டாக்டர்கள். ஆக்சிஜன் அளவு மிக குறைவாக இருப்பதாகவும், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறும் கூறினர்.

இதையடுத்து தாரணியை அழைத்து கொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் மாணவி தாரணி, சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மாணவியின் திடீர் மரணத்தால், அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!