தீபாவளி பண்டிகையையொட்டி பண்ணாரி கோவிலில் சிறப்பு வழிபாடு

தீபாவளி பண்டிகையையொட்டி பண்ணாரி கோவிலில் சிறப்பு வழிபாடு
X

பண்ணாரி அம்மன் கோவில்.

பண்ணாரி கோவிலில் தீபாவளியையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி, சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அம்மனுக்கு தங்ககசவம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். போக்குவரத்துக் கழகம் சார்பில் பண்ணாரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சத்தி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture