தாளவாடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட யானை தந்தம், புலி பல் பறிமுதல்

தாளவாடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட யானை தந்தம், புலி பல் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட புலி பல், யானை தந்தங்களுடன் வனத்துறையினர்.

தாளவாடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட யானை தந்தம் மற்றும் புலி பல்லை வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வேட்டையாடியும், இறந்து கிடக்கும் புலி, யானை ஆகியவற்றின் நகம், பற்கள், தந்தங்களை சிலர் எடுத்து விற்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பூதிபடுகை கிராமத்தில் ரங்கசாமி என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புலி நகம், பற்கள், யானை தந்தங்கள், மான் கொம்பு, உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள், வெடிபொருள், சுருக்கு கம்பி உள்ளிட்டவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து தப்பியோடிய ரங்கசாமியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்