புஞ்சைபுளியம்பட்டியில் நகை வாங்குவதுபோல் நடித்து ஒன்றரை சவரன் நகை திருட்டு

புஞ்சைபுளியம்பட்டியில் நகை வாங்குவதுபோல் நடித்து ஒன்றரை சவரன் நகை திருட்டு
X

சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்.

பு.புளியம்பட்டியில் நகைக்கடையில் திருடிய 3 பெண்களின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

புஞ்சைபுளியம்பட்டி-சத்தியமங்கலம் சாலையில் தர்மலிங்கம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 21ம் தேதி மதியம், 3 பெண்கள் கடைக்கு வந்தனர். கடையில் தங்க நகை வாங்குவது போல் பல்வேறு நகைகளின் விலையை கேட்டுள்ளனர். கடையில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர் நகைகளை எடுத்து காண்பித்தபோது பெண்கள் நகைகளை திருடி கையில் வைத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் நகைகள் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு சென்றனர்.

இதையடுத்து கடை உரிமையாளர் தர்மலிங்கம் நகைகளை சரி பார்த்தபோது அதிலிருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலி திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது கடைக்கு வந்த 3 பெண்களில் சேலை அணிந்திருந்த பெண் நகையை திருடி சுடிதார் அணிந்த பெண்ணிடம் கொடுக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து தர்மலிங்கம் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!