தாளவாடி அருகே நடிகர் ராஜ்குமாரின் பண்ணை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

தாளவாடி அருகே நடிகர் ராஜ்குமாரின் பண்ணை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
X

ராஜ்குமாரின் பண்ணை வீடு

தாளவாடி தொட்ட காஜனூரில் உள்ள, மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பண்ணை வீட்டுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். இவருடைய தந்தையான நடிகர் ராஜ்குமாரின் பண்ணை வீடு ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில் உள்ளது. ராஜ்குமார் உயிரோடு இருந்தபோது அடிக்கடி குடும்பத்துடன் தொட்டகாஜனூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு வந்து செல்வார்.

நேற்று புனித் ராஜ்குமார் பெங்களூருவில் மரணம் அடைந்தார். இதையடுத்து புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் தொட்டகாஜனூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு வரவாய்ப்பு உள்ளது. இதனால் தாளவாடி போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் ராஜ்குமாரின் பண்ணை வீட்டுக்கு முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கன்னட ரசிகர்களை கட்டுப்படுத்துவதற்காக தமிழக எல்லை பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!