கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு: தாளவாடியில் போலீஸ் பாதுகாப்பு

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு: தாளவாடியில் போலீஸ் பாதுகாப்பு
X

தாளவாடியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவையொட்டி தாளவாடியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

பிரபல கன்னட சினிமா நடிகர் ராஜ்குமாரின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் அமைந்துள்ள தொட்டகாஜனூர் கிராமம் ஆகும். ராஜ்குமார் பிறந்த வளர்ந்து ஊரான தொட்டகாஜனூரில் அவருடைய குடும்பத்தினர் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.

ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். இவரும் பிரபல கன்னட நடிகர் ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார். இதைத்தொடர்ந்து தொட்டகாஜனூரில் உள்ள நடிகர் ராஜ்குமாரின் பண்ணை வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தாளவாடியில் உள்ள புனித் ராஜ்குமார் ரசிகர்கள் ஆங்காங்கே அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் தாளவாடி பஸ் நிலையம், தொட்டகாஜனூர் சாலை, சாம்ராஜ் நகர் ரோடு ஆகிய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!