ஆதிதிராவிடர்களுக்கு இடம் ஒதுக்கி பட்டா வழங்க கோரி மனு

ஆதிதிராவிடர்களுக்கு இடம் ஒதுக்கி பட்டா வழங்க கோரி மனு
X

சத்தியமங்கலம் வட்டாட்சியர் ரவிசங்கர் இடம் மனு அளிக்கும் எம்எல்ஏ பண்ணாரி. 

சிக்கரசம்பாளையத்தில் ஆதிதிராவிடர்கள் குடும்பத்தினருடன் தற்காலிகமாக குடிசை அமைத்து வசித்து வருபவர்களுக்கு இடம் ஒதுக்கி பட்டா வழங்கோரி மனு.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டவர்த்தி, அய்யம்பாளையம், லட்சுமிபுரம் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர்கள் தங்களது குடும்பத்தினருடன் தற்காலிகமாக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் சொந்தமாக இடம் ஒதுக்கி இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி அரசுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருந்ததை கண்டறிந்து அந்த நிலத்தில் சிக்கரசம்பாளையம் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவேண்டுமென சத்தியமங்கலம் வட்டாட்சியர் ரவிசங்கர் இடம் மனு அளித்தார். மனுவை ஏற்றுக் கொண்ட வட்டாட்சியர் ரவிசங்கர் இதுகுறித்து ஆலோசனை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதில் பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத்தலைவர் கோபால்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்