சத்தியமங்கலம் அருகே கார் விபத்தில் ஒருவர் பலி.

சத்தியமங்கலம் அருகே கார் விபத்தில் ஒருவர் பலி.
X
சத்தியமங்கலம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் தனியார் பொறியியல் கல்லூரி பணியாளர் உயிரிழந்தார்.

சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பணியாளர் சரவணன். இவர் இன்று மாலை சத்தியமங்கலம் நோக்கி, காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, செண்பகபுதூர் அருகே வந்தபோது, எதிரே வந்த கார் சரவணன் சென்ற காரின் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த சரவணன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்