திம்பம் மலைப்பகுதியில் கடும் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

திம்பம் மலைப்பகுதியில் கடும் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
X

திம்பம் மலை பகுதியில் கடும் பனி மூட்டத்தில் ஊர்ந்து வரும் லாரி. 

திம்பம் மலைப்பகுதியில் கடும் பனி மூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

நீண்ட நாட்களுக்கு பின்பு மழைப் பொழிவு இல்லாததால் நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் கடுங்குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இன்று காலை திம்பம், தாளவாடி மலைப்பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பனி மூட்டம் இருந்தது.

சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், ராஜன் நகர், பண்ணாரி, தாளவாடி, திம்பம் ஆசனூர் மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் அதிகாலையில் கடும் குளிர் வாட்டியது.மேலும் இன்று காலை 8 மணி வரை பனி மூட்டமாக இருந்தது. இதனால் வனப்பகுதி கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு தலமலை, தாளவாடி வழியாக இன்று காலை சரக்கு வாகனங்கள், பஸ், லாரி மற்றும் இரு சக்கர வாகனங்கள் சென்று வந்தன. பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியே சென்றன. இதேபோல் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப் பகுதிகளிலும் பனி மூட்டமாக காணப்பட்டது. கோபிச்செட்டிப்பாளையம் , சென்னிமலை, பெருந்துறை, வெள்ளோடு, கவுந்தப்பாடி, பவானி, சித்தோடு உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பனி மூட்டமாக இருந்தது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil