பண்ணாரியில் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்

பண்ணாரியில் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்
X

பண்ணாரி கோவில் அருகே சாலையில் நிற்கும்  யானை

பண்ணாரி கோவில் வளாகத்தில் முகாமிட்டிருந்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை கடந்த சில மாதங்களாக தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளில் கரும்பு துண்டுகளை சுவைக்க பண்ணாரி சோதனை சாவடி அருகே முகாமிட்டுள்ளன.

இந்த நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று பண்ணாரி அம்மன் திருக்கோவில் அருகே சாலையில் நின்று கொண்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சாலையோரம் முகாமிட்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருவதாகவும் இதை வனத்துறையினர் கண்காணித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!