நாய் குறுக்கே ஓடியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி

நாய் குறுக்கே ஓடியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி
X
புஞ்சை புளியம்பட்டி அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற போது, நாய் குறுக்கே சென்றதில் தொழிலாளி கீழே விழுந்து பலியானார்.

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). மில் தொழிலாளி. இவருடைய நண்பர் செங்குந்த புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 44). கடந்த 3 நாட்களுக்கு முன்பு, 2 பேரும் மோட்டார்சைக்கிளில் புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து காவிலிபாளையத்துக்கு, உறவினர் ஒருவர் இறந்த துக்கம் விசாரிக்க சென்றனர்.

துக்கம் விசாரித்து விட்டு திரும்பும் வழியில், புஞ்சைபுளியம்பட்டி அருகே கோப்பம்பாளையம் அருகே வந்தபோது, நாய் குறுக்கே ஓடியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும், கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக, கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் இறந்தார். இதுகுறித்து, புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!