சத்தியமங்கலத்தில் வலிமை சிமெண்ட் விற்பனையை துவக்கி வைத்த எம்எல்ஏ

சத்தியமங்கலத்தில் வலிமை சிமெண்ட் விற்பனையை துவக்கி வைத்த எம்எல்ஏ
X
சத்தியமங்கலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வலிமை சிமெண்ட் விற்பனையை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள வலிமை சிமெண்ட் விற்பனையை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி தொடங்கி வைத்தார். அரசின் டான்சென் நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ள வலிமை சிமெண்ட் அறிமுகபடுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதர சிமெண்ட் நிறுவனங்கள் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படும் நிலையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள வலிமை சிமெண்ட் ஒரு மூட்டையானது ரூ.360-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை தமிழகம் முழுவதும் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று சத்தியமங்கலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி வலிமை சிமெண்ட் விற்பனையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி , சத்தியமங்கலம் நகர செயலாளர் கிருஷ்ணராஜ் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!