நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றி வந்த மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றி வந்த மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
X
விபத்திற்குள்ளான மினிவேன்.
சத்தியமங்கலம் அருகே நூற்பாலைக்கு ஆட்கள் ஏற்றி வந்த மினி வேன் சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் பணி புரியும் வேலையாட்களை அவர்களது வீட்டில் விட்டு விட்டு சத்தியமங்கலத்தில் இருந்து பவானிசாகர் நோக்கி மினி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அய்யன்சாலை அருகே வேன் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த ஓட்டுனர் உட்பட 4 பேர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்