ஆசனூரில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

ஆசனூரில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறையினர்  தீவிர கண்காணிப்பு
X

சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள்.

ஆசனூர் அருகே கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு.

ஆசனூர் அருகே, குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. அவ்வப்போது வனப்பகுதி வழி செல்லும் சத்தி-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு ஒரு சிறுத்தை, ஆசனூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்குமிங்கும் நடமாடிய சிறுத்தை ஒரு கோழியை துரத்தியுள்ளது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை, ஒரு நாயை அடித்து இழுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில்தான் மீண்டும் வந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: சிறுத்தை கால்தடம் மூலம், நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வனத்துறை ஊழியர்கள் முகாமிட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரத்தில் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்