நீர்வரத்து அதிகரிப்பால் கொடிவேரி அணை மூடல்: சுற்றுலா பயணிகளுக்கு தடை

நீர்வரத்து அதிகரிப்பால் கொடிவேரி அணை மூடல்: சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

கொடிவேரி தடுப்பணை.

சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணைக்கு செல்லவும், குளிப்பதற்கும் வரும் 30-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மட்டுமின்றி சேலம், கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் குடும்பத்துடன் வந்து குளித்து விட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து அதிகமாக கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அணைக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதி அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கொடிவேரி அணையில் அதிகளவில் தண்ணீர் கொட்டி வருகிறது. மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு செல்லவும், குளிப்பதற்கும் வரும் 30-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!