சத்தியமங்கலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1200

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த சில நாட்களாக, பூக்களின் விலை வீழ்ச்சியடைந்த நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மல்லிகை பூ கிலோ, 750 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று, 1,200 ரூபாய்க்கு விற்பனையானது. சம்பங்கி கிலோ, 280 ரூபாய், செவ்வந்தி, 250 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் கோழிக்கொண்டை கிலோ, 80 ரூபாய், ஒரு கட்டு ரோஸ், 160 ரூபாய்க்கு விற்பனையானது. பூக்களின் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu