சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம்
X
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம் போனது

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கரட்டூர் ரோட்டில், பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில், தினமும் காலை 7 மணி முதல், மதியம் 2 மணி வரை, பூக்கள் ஏலம் நடைபெறும். இந்த ஏலத்துக்கு, சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, ஏராளமான விவசாயிகள் 2 அரை டன் பூக்களை நேற்று விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

ஏலத்தில், மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,575-க்கும், முல்லை ரூ.660-க்கும், காக்கடா ரூ.825-க்கும், செண்டுமல்லி ரூ.60-க்கும், பட்டுப்பூ ரூ.73-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.465-க்கும், சம்பங்கி ரூ.15-க்கும், அரளி ரூ.280-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போயின.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!