ஈரோடு அருகே காட்டு யானையை எதிர்த்து நின்ற ஜல்லிகட்டு காளை

ஈரோடு அருகே காட்டு யானையை எதிர்த்து நின்ற ஜல்லிகட்டு காளை
X

ஈரோடு அருகே காட்டு யானையை விரட்டிய காளை

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கர்நாடக வன பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற மாடு காட்டு யானையை எதிர்த்து ஜல்லிகட்டு காளை போல் சீறிய சம்பவம் குறித்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் மலைவாழ் மக்கள் கால்நடைகளை வளர்த்து தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புளிஞ்சூர் பகுதியை சேர்ந்த மாதேஷ் என்ற மலை கிராம வாசி தனது பதிமூன்று கால்நடைகளை மேய்ச்சலுக்கு கர்நாடக வன பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது புதரின் நடுவில் ஆண் காட்டு யானை நிற்பதை மாதேஷ் பார்த்ததும் கால்நடைகளை திருப்பி அழைத்துச்செல்ல முயன்றுள்ளார்.

இதில் ஒரே ஒரு மாடு மட்டும் யானையை எதிர்த்து சண்டை போட தயாரானது. தனது கால்களால் நிலத்தை கீறி புழுதி கிளம்ப தனது கோபத்தை காட்டி யானையை எதிர்த்து நின்றது.

பார்ப்பதற்கு ஜல்லிகட்டு காளை போல் ஆண் யானையை எதிர்த்து போராட தயாராகியது. இதனையடுத்து மாட்டின் சீற்றத்தை அறிந்த யானை பின் வாங்கி வனப்பகுதிக்குள் ஒடியது.

இந்த சம்பவத்தை மாடு மேய்க்கும் தொழிலாளி மாதேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!