பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானி ஆற்றில் வெள்ளம் அதிக அளவில் வருவதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அவலாஞ்சி பகுதியில் கழடைந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் இன்று காலை 8 மணி முதல் பவானிசாகர் அணைக்கு வர தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 23 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு 2300 கனஅடியும், அரக்கன்கோட்டை- தடப்பள்ளி பாசனத்துக்கு 500 கனஅடியும், பவானி ஆற்றில் 3 ஆயிரத்து 200 கனஅடியும் திறந்து விடப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் வெள்ளம் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story