கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளர்ச்சி பணிகள் துவக்க விழா; அமைச்சர் பங்கேற்பு

கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளர்ச்சி  பணிகள் துவக்க விழா; அமைச்சர் பங்கேற்பு
X

கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையதில் நடந்த விழாவில் அமைச்சர் முத்துசாமி நல திட்ட உதவிகளை வழங்கினார்.

கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் முத்துசாமி தொடங்கிவைத்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் கடம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு சத்தியமங்கலம் கைத்தறி மற்றும் துணிநூல், வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 1. 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3922 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருவதாகவும் அதிலும் ஒரு சில திட்டங்கள் மக்களின் வீட்டைத் தேடி வரும் வகையில் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பழனி தேவி, சத்தியமங்கலம் வட்டாட்சியர் ரவிசங்கர், சத்தியமங்கலம் நகர பொருளாளர் ஜானகி ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story