சத்தியமங்கலம் அருகே உடும்பு பிடிப்பட்டது

சத்தியமங்கலம் அருகே உடும்பு பிடிப்பட்டது
X

பழக்கடையில் பிடிபட்ட உடும்பு

சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழக்கடையில் உடும்பு பிடிபட்டது

சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பழக்கடையில், காலையில் உரிமையாளர் கடையை திறந்து உள்ளே சென்று அங்குள்ள பழக்கூடைகளை நகர்த்தி வைத்து கொண்டிருந்தபோது, ஒரு நாற்காலிக்கு கீழ் உடும்பு இருப்பதை பார்த்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுபற்றி சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனவர் பெர்னாட் மற்றும் ஊழியர்கள் அந்த கடைக்கு சென்று உடும்பை லாவகமாக பிடித்தார்கள்.

பிடிபட்ட உடும்பு சுமார் 2 அரை அடி நீளம் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அதை ஒரு சாக்குப்பையில் போட்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!