மல்லியம்மன் துர்கம் மலைப்பகுதியில் பலத்த மழை:பாறை இடுக்குகளில் திடீர் அருவி

மல்லியம்மன் துர்கம் மலைப்பகுதியில் பலத்த மழை:பாறை இடுக்குகளில் திடீர் அருவி
X

திடீர் அருவியை கண்டு ரசித்த பொதுமக்கள்.

மல்லியம்மன் துர்கம் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பாறை இடுக்குகளில் திடீர் அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டியது.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மல்லியம்மன் துர்கம் மலைவனப்பகுதியில் மல்லியம்மன் கோவில், இரட்டைபாலம், போன்பாறை, இடுக்கு பாறை, தன்னாசியப்பன் கோவில் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறை இடுக்குகள் உள்ளன. பலத்த மழை பெய்தால் இந்த பாறை இடுக்குகளில் திடீர் அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டும்.



இந்நிலையில் இன்று மாலை மல்லியம்மன் கோவில், இரட்டைபாலம், போன்பாறை, இடுக்கு பாறை, தன்னாசியப்பன் கோவில் போன்ற இடங்களில் நிற்காமல் பலத்த மழை பெய்தது. இதனால் இந்த இடங்களில் திடீர் அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் இந்த காட்சிகளை தங்களுடைய செல்போன்களில் படம் பிடித்து ரசித்துவிட்டு செல்கிறார்கள். மலைப்பகுதியில் பெய்த திடீர் மழையால் வனப்பகுதி முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!