சத்தி வனப்பகுதியில் கனமழை: சறுக்கி விழுந்து யானை சாவு

சத்தி வனப்பகுதியில் கனமழை: சறுக்கி விழுந்து யானை சாவு
X

பைல் படம்.

கடம்பூரில் மலைச் சரிவில் இறங்கும்போது ஆண் யானை சறுக்கி விழுந்து உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட குத்தியாலத்தூர் காப்புக்காடு, கொண்டப்ப நாயக்கன்பாளையம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ராமர்போலி காட்டுப்பகுதியில் 25 வயதான ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள்கள ஆய்வு செய்ததில் கனமழையின் காரணமாக மலைச்சரிவில் இருந்து சறுக்கி தவறி விழுந்ததில் மரத்தில் தந்தங்கள் அடிபட்டு உடைந்து இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். இறந்த ஆண் யானையின் உடலில் இருந்து இரண்டு தந்தங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்