ஆசனூரில் பேருந்து-லாரி மோதி விபத்து

ஆசனூரில் பேருந்து-லாரி மோதி விபத்து
X

விபத்திற்குள்ளான அரசு பஸ்.

தாளவாடி அருகே அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் தாளவாடியிலிருந்து கோயமுத்தூர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஆசனூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் பேருந்தின் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆசனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!