சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலி: விவசாயிக்கு இடைக்கால நிவாரணம்

சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலி: விவசாயிக்கு இடைக்கால நிவாரணம்
X

பலியான ஆடுகள்.

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலி சம்பவத்தில் விவசாயிக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உடபட் கேம்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கசாமி, விவசாயி. இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ந் தேதி இவர் வளர்த்து வந்த 7 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றது. மேலும் 3 ஆடுகளை கவ்வி சென்றது. இந்த பெரும்பள்ளம் சிறுத்தை அணை பகுதியில் நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து வனத்துறையினர் இந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதையடுத்து தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்றம் சங்கம் சார்பில் விவசாயி தங்கசாமிக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இடைக்கால நிவாரணமாக ஒரு ஆட்டுக்கு ரூ.1000 வீதம் 7 ஆடுகளுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. இதற்காக வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்கும் பணி நடந்து வருகிறது.விவசாயிகள் யாரேனும் இதுபோல் விலங்குகளால் தாக்கி தங்கள் கால்நடைகள் உயிரிழந்தால் இடைக்கால நிவாரணம் கிடைக்க தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்றம் சங்கத்தைச் சேர்ந்த நமேஸ் என்பவரின் செல்போன் 8838332124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!