பவானிசாகரில் இலவச மருத்துவ முகாம்

பவானிசாகரில் இலவச மருத்துவ முகாம்
X

பனையம்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

பவானிசாகரில் இலவச மருத்துவ முகாமினை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனையம்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து தனது உடலை பரிசோதனை செய்து கொண்டார். பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு வரிசையில் நின்று தங்களது உடலை பரிசோதனை செய்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார ஆய்வாளர் மகாலிங்கம், ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் சசிகலா, பூர்ணிமா, தனலட்சுமி மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை தலைவர் கோபால்சாமி, அவைத்தலைவர் மணி, பனையம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!