பவானி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

கோப்பு படம் 

பவானிசாகர் அணையில் இருந்து அதிப்படியான உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையில் தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர், பவானி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் நீரின் அளவு 6500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் இரவு பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் அதிகப்படியான உபரிநீர் திறக்கப்படுகிறது.


எனவே, பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, விளையாடவோ செல்ல வேண்டாம் எனவும் சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் நகராட்சி பகுதியில் ஆற்றங்கரையோரம் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பவானிசாகர் அணையில் தண்ணீர் திறந்து விடுவதால், அத்தாணி காமராஜபுரம் கருவல்வாடிப்புதூர் நஞ்சுண்டாபுரம் கீழ்வாணி, மேவாணி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!