தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
X

சேதமடைந்த மக்காசோள பயிர்.

தாளவாடி அருகே இக்கலூர் கிராமத்தில் மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த இக்கலூர் கிராமமானது தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்டது. இப்பகுதியானது வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு ராகி, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் மக்காச்சோள பயிர்களை மிதித்தும், தின்றும் சேதம் செய்தன. தொடர்ந்து வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ராகி , மக்காச்சோளப் பயிர்களை சேதம் செய்து வருவதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai healthcare technology