கொரோனா புதிய கட்டுபாடு : தமிழக-கர்நாடக எல்லையில் தீவிர சோதனை

கொரோனா புதிய கட்டுபாடு : தமிழக-கர்நாடக எல்லையில் தீவிர சோதனை
X

தாளவாடி சோதனை சாவடி.


புதிய கட்டுபாடுகள் காரணமாக தாளவாடி அருகே சான்றிதழ் இல்லாமல் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் தடுத்து நிறுத்தம்.

கொரோனா பரவலை கட்டுபடுத்த ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி பால், மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மாநில எல்லை பகுதியான தாளவாடி அடுத்த பாரதிபுரம், கும்டாபுரம் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் காவலத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது கர்நாடகவில் இருந்து தமிழகத்திக்குள் நுழையும் நபர்களிடம் 72 மணி நேரத்திக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ் காட்டியவர்களை மட்டுமே அனுத்தித்தனர். இந்த இரண்டு சான்றிதழ்களும் இல்லாதவர்களை சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தி மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture