பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91 கன அடியாக குறைவு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91 கன அடியாக குறைவு
X

பவானி சாகர் அணை (பைல் படம்) 

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91.96 அடியாக குறைந்து உள்ளது. அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91.96 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 418 கன அடியாக குறைந்தது. கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2,300 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 300 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!