பவானிசாகர் அணையில் பரிசல் கவிழ்ந்து விபத்து : மூழ்கிய வாலிபர் உடலை தேடும் பணி தீவிரம்

bhavanisagar dam reservoir area overturning accident-பவானி சாகர் அணை (கோப்பு படம்)
Dead News- ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் பரிசலில் சென்றபோது பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தண்ணீரில் வாலிபர் மூழ்கினார்.அவரை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கோவை மாவட்டம், அன்னூர், கரியாம்பாளையம் காலனியை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மகன் நித்திஷ்குமார் (18). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தோட்ட பராமரிப்பாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி (22), தீனா (18), பிரவீன் (21), நிஷாந்த் (19) ஆகியோருடன் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதி சுஜில்குட்டை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.
தொடர் மழையால் பவானிசாகர் அணை நிரம்பி உள்ளதால், அதன் நீர்த்தேக்க பகுதி கடல்போல் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. நண்பர்களுடன் வந்திருந்த நித்திஷ்குமார் அணையின் நீர்த்தேக்க பகுதியை பரிசலில் சென்று பார்வையிட விரும்பினர்.
நண்பர்கள் அனைவரும் ஒரு பரிசலில் ஏறி அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு சென்றனர். பரிசலை சுஜில்குட்டையை சேர்ந்த நாகராஜ் (50) என்பவர் ஓட்டினார். அவர்கள் சென்ற பரிசல் கரிமொக்கை என்ற இடத்தின் அருகே சென்றபோது காற்று அதிகமாக வீசியது. இதனால் நாகராஜ் ஓட்டிச்சென்ற பரிசல் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பரிசலில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழுந்தனர்.
அப்போது அந்தப்பகுதிக்கு மற்றொரு பரிசலில் வந்த அய்யாசாமி என்பவர் விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த நித்திஷ்குமாரின் நண்பர்கள் 4 பேரையும் மீட்டு அவரது பரிசலில் ஏற்றினார்.
மேலும் பரிசல் ஓட்டிய நாகராஜும் இந்த விபத்தில் உயிர் தப்பினார். ஆனால், நித்திஷ்குமார் மட்டும் தண்ணீரில் மூழ்கி விட்டதாக தெரிகிறது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சுஜில்குட்டையை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீரில் மூழ்கிய நித்திஷ்குமாரை தேடினர். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
erode news today-தகவல் அறிந்த பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களுடன் நித்திஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உடலைக்காணாமல் நித்திஷ்குமாரின் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu