நீர்வரத்து குறைவு: பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

நீர்வரத்து குறைவு: பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
X
நீர்வரத்து குறைந்ததால், பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதிகளான ஊட்டி, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழைபெய்து வந்ததது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டியது. பவானி சாகர் அணைக்கு, நேற்று 8 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து 9 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 103.96 அடியாக இருந்தது. 3 ஆயிரத்து 308 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு, 1800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வந்த தண்ணீர், முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!