சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் வாழைக்காய் வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்

சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் வாழைக்காய் வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்
X

விபத்துக்குள்ளான பிக்அப் வேன்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் பிக்கப் வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகில் வாழைக்காய் ஏற்றி வந்த பிக்கப் வேன் கவிந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வாழைக்காய்கள் சாலையில் சிதறி சேதமடைந்தன.

இந்த விபத்தில் பிக்கப் வேனில் வந்த ஓட்டுநர் உட்பட 4 கூலித் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும் விபத்துக்குள்ளான காரணம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி