பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் 5 டி.எஸ்.பி-களுக்கு கொரோனா!

பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் 5 டி.எஸ்.பி-களுக்கு கொரோனா!
X
பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த ஐந்து டி.எஸ்.பிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. குரூப் தேர்வு எழுதி தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு, இங்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் குரூப்-1 தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் 25 பேருக்கு, கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முதல், இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அந்த பயிற்சியானது இன்றுடன் முடிவடைந்தது.

இதனிடையே, பயிற்சி பெற்ற 25 டிஎஸ்பி-களில் சிலருக்கு, கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல், தலைவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டதால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 டிஎஸ்பி-களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் மற்ற 20 டி.எஸ்.பிக்கள், பயிற்சி நிலைய முதல்வர், ஊழியர்கள் என முப்பது பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அந்த பயிற்சி நிலையத்திலேயே உள்ள தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!