பவானிசாகரில் 11ம் வகுப்பு மாணவி மாயம்

பவானிசாகரில் 11ம் வகுப்பு மாணவி மாயம்
X

பைல் படம்.

பவானிசாகர் அருகே பள்ளி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொட்டம் பாளையம் அண்ணாநகரை சேர்ந்த ராஜசேகர் (43). இவரது மகள் மைதிலி (15). இவர், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய மைதிலி மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம், தோழிகள் வீடுகளில் விசாரித்தும் மைதிலி கிடைக்கவில்லை. இது குறித்து பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் மைதிலியின் தாய் மோகனா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மைதிலியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!