பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
X

கழுகுப் பார்வையில் பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,067 கன அடியிலிருந்து 2,214 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,067 கன அடியிலிருந்து 2,214 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானி சாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து பில்லூர் அணைக்கு வந்து அங்கிருந்து மேட்டுப் பாளையம் வழியாக பவானி சாகர் அணைக்கு வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹடா வனப்பகுதி வழியாக வரும் மாயாறும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பருவமழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் என மாறி மாறி வருகிறது. மேலும், கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மெல்ல சரியத் தொடங்கியுள்ளது.

இதனிடையே, அணைக்கு நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,067 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 2,214 கன அடியாக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை (டிச.16) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 84.09 அடி ,

நீர் இருப்பு - 17.95 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 2,214 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 2,200 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 1,800 கன அடி நீரும், அரக்கன் கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 300 கன அடி நீரும் , குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 2,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பவானி சாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு