பவானிசாகர் அணை நீர்மட்டம் 96.28 அடியாக உயர்வு

பவானிசாகர் அணை நீர்மட்டம் 96.28 அடியாக உயர்வு
X

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதி.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (14ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 96.28 அடியாக உயர்ந்தது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (14ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 96.28 அடியாக உயர்ந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாகும். இந்த அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்கால் வழியாக சுமார் 2.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.

நேற்று (13ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,218 கன அடியாக இருந்த நிலையில், இன்று (14ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,981 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 96.01 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 96.28 அடியாக உயர்ந்தது.

அதேபோல், அணையில் நீர் இருப்பு 25.71 டிஎம்சியிலிருந்து 25.91 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 2.2 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!