பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 65 அடியாக உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 65 அடியாக உயர்வு
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (1ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 65.48 அடியாக உயர்ந்தது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (1ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 65.48 அடியாக உயர்ந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையாகும். ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கிறது.

இந்த நிலையில், அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழையைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

நேற்று (30ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,896 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (1ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,369 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் என மொத்தம் 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை 64.74 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 65.48 அடியாக உயர்ந்தது. அதேபோல், நீர் இருப்பு 8.88லிருந்து 9.16 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!