பவானிசாகர் அணை நீர்வரத்து 6,483 கன அடி: 89 அடியை நெருங்கியது நீர்மட்டம்

பவானிசாகர் அணை நீர்வரத்து 6,483 கன அடி: 89 அடியை நெருங்கியது நீர்மட்டம்
X

பவானிசாகர் அணைப் பகுதி.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று (28ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,483 கன அடியாக இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 89 அடியை நெருங்கி வருகிறது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று (28ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,483 கன அடியாக இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 89 அடியை நெருங்கி வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருக்கிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப் பகுதியில் பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

இதனால், பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பவானிசாகர் அணைக்கு வந்து சேரும், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து நேற்று (27ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,982 கன அடியாக இருந்த நிலையில், இன்று (28ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,483 கன அடியாக குறைந்துள்ளது. நேற்று காலை 87.70 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 88.86 அடியாக உயர்ந்தது.

விரைவில் 89 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், நீர் இருப்பு 20.85 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!