ஈரோட்டில் தனியார் கல்லூரி சார்பில் மகளிர் மருத்துவ முகாம்

ஈரோட்டில் தனியார் கல்லூரி சார்பில் மகளிர் மருத்துவ முகாம்
X

ஈரோடு ஸ்ரீவாசவி கல்லூரி பெண்கள் அமைப்பு மற்றும் ஈரோடு சி.கே. மருத்துவ மைய மருத்துவமனையும் இணைந்து மகளிர் மருத்துவம் குறித்து, ஒருநாள் சிறப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தின.

தனியார் கல்லூரி மற்றும் சி.கே. மருத்துவ மனைத்துவமனை சார்பில் நடந்த மளிருக்கான சிறப்பு மருத்துவ முகாமை, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தொடங்கி வைத்தார்.

ஈரோடு ஸ்ரீவாசவி கல்லூரி சுயநிதி பிரிவின், ஸ்ரீவாசவி பெண்கள் அமைப்பு மற்றும் ஈரோடு சி.கே. மருத்துவ மைய மருத்துவமனையும் இணைந்து, மகளிர் மருத்துவம் குறித்து ஒருநாள் சிறப்பு விழிப்புணர்வு முகாமை, நேற்று நடத்தின. ஈரோடு வித்யா சங்கத்தின் தலைவர் சுதாகர் தலைமையில் நடந்த இந்த முகாமில், ஈரோடு சி.கே. மருத்துவ மைய மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளரும், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ-வுமான டாக்டர். சி. சரஸ்வதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, மகளிர் மருத்துவம் குறித்த பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவரை தொடர்ந்து, சி.கே. மருத்துவ மையம் மருத்துவமனையின் மருத்துவர் எஸ். தமிழ்ச்செல்வி, பல்வேறு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், மகளிருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் குறித்த சோதனைகள் நடத்தப்பட்டு, அனைவருக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!